உள்ளுர் செய்திகள்

மேலதிக நிமிடங்கள் வரையில் சென்ற ஆட்டம் : சென்றலைட்ஸ் அணி திறில் வெற்றி

மேலதிக நிமிடங்கள் வரையில் சென்ற ஆட்டம் : சென்றலைட்ஸ் அணி திறில் வெற்றி

சம்பியன் பற்றீசியன் அணியின் அனுபவ ஆட்டம் போட்டியை விறுவிறுப்பாக்கியது. விடாது சமநிலை என்ற நிலையில் சென்ற ஆட்டத்தில் மேலதிக நிமிடத்தில், ஒரு புள்ளி முன்னிலை பெற்று சம்பியனாகிய சென்றலைட்ஸ் அணி.

சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில், மறைந்த பொன் விபுலானந்தன் ஞாபகார்த்தமாக, கூடைப்பந்தாட்ட கழகங்களுக்கிடையில் கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடத்தப்பட்டு வந்தது.

இதன் இறுதியாட்டம் 6 ஆம் திகதி இரவு நடைபெற்றது. இதில் பற்றீசியன் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. முதற்கால்ப்பாதியாட்டம் முடிவில் பற்றீசியன் அணி, 19:18 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து மிக இறுக்கமாக நடைபெற்ற ஆட்டத்தில் முதற்பாதியாட்டம் முடிவடைகையில் இரு அணிகளும் தலா 31 புள்ளிகளைப் பெற்றிருந்தன. மூன்றாவது கால்பாதியாட்டம் மிகவும் விறுவிறுப்பாக இரு அணிகளும் மாறி மாறி, புள்ளிகளைப் பெற்றன.

மூன்றாம் பாதியாட்டம் முடிவடையும் போது, பற்றீசியன் அணி, 42:41 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது. இதனால், நான்காவது கால்ப்பாதியாட்டம் மிகவும் விறுவிறுப்படைய, சென்றலைட்ஸ் அணியும் விட்டுக்கொடுக்காது ஆடியது. நான்காவதும் இறுதியுமான கால்ப்பாதியாட்டம் முடிவடையும் போது, இரு அணிகளும் தலா 55 புள்ளிகளைப் பெற்றிருந்தன.

வெற்றியாளரைத் தீர்மானிக்க மேலதிகமாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த ஐந்து நிமிடங்களில், சென்றலைட்ஸ் அணி தங்கள் வெற்றியை உறுதி செய்தது.

முடிவில் சென்றலைட்ஸ் அணி, 61:60 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று சம்பியனாகியது. இந்தச் சுற்றுப்போட்டியின் தொடர்நாயகனாக சென்றலைட்ஸ் அணியின் ஹர்சன் தெரிவு செய்யப்பட்டதுடன், இறுதிப்போட்டியின் நாயகனாக பற்றீசியின் அணியின் பிறிஸ்ரன் தெரிவு செய்யப்பட்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.