உள்ளுர் செய்திகள்

யாழ்.மாவட்ட ஹொக்கிச் சுற்றுப்போட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சம்பியனாகியது

யாழ்.மாவட்ட ஹொக்கிச் சுற்றுப்போட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சம்பியனாகியது

யாழ்ப்பாணம் ஹொக்கிச் சங்கத்தின் ஏற்பாட்டிலும், றொட்டரிக் கழகத்தின் அனுசரணையிலும், அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான ஹொக்கிச் சுற்றுப்போட்டி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னெல் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த சுற்றுப்போட்டியில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யூனியன் விளையாட்டுக்கழகம், கிறாஸ்கோப்பர்ஸ் விளையாட்டுக்கழகம், ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகம், யாழ்.ஸ்ரார்ஸ் விளையாட்டுக்கழகம், நியு வோரியர்ஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் ஓல்ட் கோல்ட் விளையாட்டுக்கழகம் ஆகியன பங்குபற்றின.

சுற்றுப்போட்டியின் முதலாவது அரையிறுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியை எதிர்த்து கிறாஸ்கோப்பர்ஸ் அணி மோதியது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி, 3:1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெறு இறுதிக்கு தகுதி பெற்றது.

இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் ஓல்ட் கோல்ட் அணியை எதிர்த்து யாழ்.ஸ்ரார்ஸ் அணி மோதியது. இதில் ஓல்ட் கோல்ட் அணி, 3:1 என்ற கோல்கள் கணக்கில் வென்று இறுதிக்குத் தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியை எதிர்த்து ஓல்ட் கோல்ட் அணி மோதியது.

போட்டி தொடங்கிய முதலாவது நிமிடத்தில் ஓல்ட் கோல்ட் அணியின் இராஜேஸ்வரன் முதலாவது கோலை அடித்தார். அதே உத்வேகத்துடன் ஆடிய ஓல்ட் கோல்ட் அணி, 3 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் அடித்தது. அந்தக் கோலை பிரியலக்சன் அடித்தார்.

அதன் பிறகு ஆட்டத்தில் வேகத்தை அதிகரித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி, 13 ஆவது நிமிடத்தில் சிரோன் மூலம் பதில் கோல் அடித்தது. சிரோன் 22 ஆவது நிமிடத்தில் அணிக்கான இரண்டாவது கோலை அடித்து, ஆட்டத்தை சமப்படுத்தினார்.

ஆட்ட நேரம் முடியும் போது, இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் பெற்றிருந்தன. வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது.

இதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி, 3:1 என்ற கோல்கள் கணக்கில் வென்றது. இறுதிப்போட்டியின் நாயகனாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியின் சுஜீவன் தெரிவு செய்யப்பட்டதுடன், பல்கலையின் சிரோன் தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.