Foot Ball

வருத்தப்படாத வாலிப வெற்றிக்கிண்ணம் : இளவாலை யங்ஹென்றிஸ் அணி சம்பியன்

வருத்தப்படாத வாலிப வெற்றிக்கிண்ணம் : இளவாலை யங்ஹென்றிஸ் அணி சம்பியன்

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் 5 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, வடமாகாண ரீதியில் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்று இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டு வந்தது.

24 அணிகள் பங்குபற்றிய இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு இளவாலை யங்ஹென்றிஸ் அணியும் கொற்றவத்தை றேஞ்சர்ஸ் அணியும் தகுதி பெற்றன. இறுதிப்போட்டி 24 ஆம் திகதி இரவு நடைபெற்றது.

போட்டியின் முதல் கோலை யங்ஹென்றிஸ் அணி அடித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அடுத்த நிமிடத்திலேயே றேஞ்சர்ஸ் அணி பதில் கோலைப் போட்டது.

முதற்பாதியாட்டம் முடிவடைய சில நிமிடங்கள் இருக்கையில் யங்ஹென்றிஸ் அணி அடுத்த கோலையும் போட்டது. இரண்டாவது பாதியாட்டத்தில் மேலும் ஒரு கோலைப் போட்டு, வெற்றியை உறுதி செய்த யங்ஹென்றிஸ் பிற்பகுதி நேரத்தில் தடுப்பு ஆட்டத்தை மேற்கொண்டது.

முடிவில் யங்ஹென்றிஸ் அணி, 03:01 என்ற கோல்கள் கணக்கில் வென்று சம்பியனாகியது.

யங்ஹென்றிஸ் அணி சார்பாக சுமன், மகீபன் மற்றும் ஞானரூபன் ஆகியோர் தலா 1 கோல்களையும், றேஞ்சர்ஸ் அணி சார்பாக ஆர்த்திகன் ஒரு கோலையும் அடித்தனர்.

தொடர்நாயகன், இறுதிப்போட்டி நாயகன் மற்றும் சிறந்த கோலை காப்பாளர் ஆகிய விருதுகளை யங்ஹென்றிஸ் அணியை சேர்ந்த முறையே இக்னி, ஞானரூபன் மற்றும் அமல்ராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.