Foot Ball

ரி.பி.பத்மநாதன் ஞாபகார்த்த கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

ரி.பி.பத்மநாதன் ஞாபகார்த்த கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

கிறாஸ்கோப்பர்ஸ் அணியின் முன்னாள் பயிற்றுநர் ரி.பி.பத்மநாதன் ஞாபகார்த்தமாக நடத்தப்படவுள்ள கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் அரியாலை கால்ப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சுற்றுப்போட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக, வலிகாமம் லீக்கின் ஒழுங்கமைப்பில் நடத்தப்பட்டு வந்த இந்தச் சுற்றுப்போட்டியானது, சில குழப்பங்களால் இம்முறை யாழ்ப்பாண லீக்கின் ஒழுங்கமைப்பில், ராஜகாந்தன், தர்மகுலசிங்கம் மற்றும் மோகன்ராம் ஆகியோரின் அனுசரணையில் நடைபெறவுள்ளது.

இந்த சுற்றுப்போட்டி தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு அரியாலை கால்ப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் 25 ஆம் திகதி நடைபெற்றது.

இதன்போது, யாழ்ப்பாண லீக்கின் தலைவரும் மாநகர முதல்வருமான இமானுவல் ஆர்னோல்ட் மேற்படி விடயங்களை தெளிவுபடுத்தினார்.

யாழ்ப்பாண லீக்கைச் சேர்ந்த 16 அணிகள் பங்குபற்றும் இந்தச் சுற்றுப்போட்டியானது, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நடைபெற்று இறுதிப்போட்டியானது 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

சம்பியனாகும் அணிக்கு 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாமிடம் பெறும் அணிக்கு 25 ஆயிரம் ரூபாயும் பரிசுத் தொகை வழங்கப்படுவதுடன், இறுதிப்போட்டியில் மோதும் இரண்டு அணியிலும் இருந்து தலா ஒரு சிறந்த வீரர் தெரிவு செய்யப்படுவார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.