Sri Lanka

இங்கிலாந்து கலக்கலான தொடக்கம்; வீறுகொண்டு எழுந்த மாலிங்க அசத்தல்…!!

இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ரண்கிரி தம்புள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களைப் பெற்று, 279 என்ற சவாலான இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.

துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி முதலாவது மலிங்கவின் ஓவரிலேயே ஜேசன் றோயை இழந்தது. அதன் பின்னர் ஜொனி பெயர்ஸ்ரோ-ஜோ ரூட் இணை அரைச்சத இணைப்பாட்டத்தை பூர்த்தி செய்த நிலையில் ஜொனி பெயஸ்ரோ ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அணித்தலைவர் மோர்கன்-ஜோ ரூட்டுடன் இணைந்து வெளுத்துக் கட்டினார். அரைச்சத இணைப்பாட்டத்தை கடந்த நிலையில் ரூட் தனஞ்சய டீ சில்வாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மோர்கனுடன் இணைந்து அரைச்சத இணைப்பாட்டத்தை மேற்கொண்ட பென் ஸ்ரோக்ஸ் தனஞ்சயவின் சுழலில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வீறு கொண்டெழுந்த லசித் மலிங்க மோர்கன், மொகின் அலி, கிறிஸ் வோக்ஸ் மற்றும் டௌசனை அடுத்தடுத்து வெளியேற்ற இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்து சார்பாக மோர்கன் 92 ஓட்டங்களைப் பெற ஜோ ரூட் 71 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை சார்பாக பந்துவீச்சில் மலிங்க 45 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற நுவான் பிரதீப், தனஞ்சய டீ சில்வா, அகில தனஞ்சய மற்றும் திசர பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்கள்.

வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான தம்புள்ள மைதானத்தில் இலங்கை அணிக்கு 279 என்ற மிகக் கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.