England

மழையின் தீவிரம் – முதலாவது போட்டி கைவிடப்பட்டது

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நேற்றைய தினம் தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் களத்தடுப்பினைத் தெரிவு செய்தார்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட களம் புகுந்தனர்.

15 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 92 ஓட்டங்களைப் பெற்று இரு விக்கெட்டுக்களை இழந்த நேரத்தில், மழை களம் புகுந்ததது.

தொடர்ச்சியாக மழையாக இருந்தபடியால் முதலாவது போட்டி கைவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இரண்டாவது போட்டி வரும் சனிக்கிழமை அதே தம்புள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.