South Africa

`ஹாட்ரிக்’ இம்ரான் தாஹிர்; 78 ரன்னில் சுருண்ட ஜிம்பாப்வே! #SavZim

ஜிம்பாப்வே அணி தென்னாப்பிரிக்கா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க  அணி முதலில் பேட்டிங்கை தேர்வு  செய்தது.

ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்க ஜிம்பாப்வே தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது. முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நடுவரிசை வீரர்களின் உதவியுடன் தென்னாப்பிரிக்கா 100 ரன்களை கடந்தது. தென்னாப்பிரிக்கா அணி 25 ஓவர்களில் 101 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறந்திய வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 8 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் அவர் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் சடாரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தாஹிர்

 

பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஜிம்பாப்வே அணி. பேட்டிங்கில் கலக்கிய டேல் ஸ்டெயின்,  பந்துவீச்சிலும் கலக்கினார். தொடக்கத்திலே இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி ஜிம்பாப்வே அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் பந்துவீச வந்த சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர், ஜிம்பாப்வே அணியை காலி செய்தார். ஒருகட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் என்று இருந்த ஜிம்பாப்வே அணி, 78 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இம்ரான் தாஹிர் 6 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட்டுகள் சாய்த்தார்.

இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி, 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது . ஆட்டநாயகனாக டேல் ஸ்டெயின் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

#நன்றி_விகடன்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.