India

கன்னி டெஸ்டிலேயே சதம் – இந்தியா அபார ஆரம்பம்

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேகொண்டு, இன்றைய தினம் முதலாவது டெஸ்டினை  ராஜ்கோட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக தொடங்கியது.

இதில் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் விராத் கோலி, முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

மற்றொரு புறம் தனது View image on Twitterமுதல் சர்வதேச போட்டியில் களமிறங்கிய இளம் வீரர் பிரித்வி ஷா, புஜாராவுடன் இணைந்து பந்துகளை சிதறடித்தார்.

தனது முதல் போட்டியிலேயே சதமடித்த பிரித்வி ஷா, 154 பந்துகளில் 134 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். வெறும் 18வயதிலேயே அணிக்குள் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக விளையாடிய புஜாராவும் 86 ஓட்டங்களில் வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய விராத் கோலியும், ரஹானேவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ரஹானே 41 ஓட்டங்களில் வெளியேற, இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 364 ஓட்டங்களை குவித்துள்ளது.
கோலி 72 ஓட்டங்களிலும், ரிஷாப் பண்ட் 17 ஓட்டங்களிலும் களத்தில் உள்ளனர்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.