உள்ளுர் செய்திகள்

தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் : வடக்கிற்கு பதக்கங்கள்

தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் : வடக்கிற்கு பதக்கங்கள்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் 1 ஆம் திகதி முதல் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

1 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற போட்டிகளில், 20 வயதுப்பிரிவு ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஏ.புவிதரன் 4.55 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கம் பெற்றார்.

இரண்டாமிடத்தை அளவெட்டி அருணோதயக் கல்லூரியைச் சேர்ந்த ஜதுசன் பெற்றுக்கொண்டார். இவர் 4.45 மீற்றர் உயரம் பாய்ந்தார்.

இதில், 18 வயதுப்பிரிவு பெண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குபற்றிய தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த ச.ஹெரீனா 1.53 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டிகளில், 20 வயதுப்பிரிவு பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வி.சாத்விகா 3 மீற்றர் உயரம் பாய்ந்து வர்ணச் சான்றிதழுடன் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

12 வயதுப்பிரிவு பெண்களுக்கான நீளம் பாய்தலில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அருணவி 4.53 மீற்றர் நீளம் பாய்ந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.

18 வயதுப்பிரிவு ஆண்களுக்கான நீளம் பாய்தலில் மன்னார் கொண்டாச்சி ஜி.ரி.எம்.எஸ் பாடசாலையைச் சேர்ந்த கே.பி.ஜனுசன் பீரிஸ் 6.59 மீற்றர் நீளம் பாய்ந்து வெண்கலப்பதக்கம் பெற்றார். 16 வயதுப்பிரிவு ஆண்களுக்கான தட்டெறிதலில் ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.மிதுன்ராஜ் 50.83 மீற்றர் நீளம் எறிந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.