Foot Ball

இளவாலை யங்ஹென்றிஸ் அணி இறுதிக்குள் நுழைவு

இளவாலை யங்ஹென்றிஸ் அணி இறுதிக்குள் நுழைவு

அரியாலை சரஸ்வதி விளையாட்டுக்கழகம் தமது நூற்றாண்டு விழாவையொட்டி ‘வடக்கின் கில்லாடி யார்;” என்னும் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்றை அரியாலை கால்ப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நடத்தி வருகின்றது.

வருடாவருடம் யாழின் கில்லா என நடத்தப்பட்டு வந்த இந்தச் சுற்றுப்போட்டியானது, இந்த வருடம் வடக்கின் கில்லாடியாக மாற்றப்பட்டு, வடமாகாணம் தழுவிய வகையில் மொத்தம் 32 அணிகள் இந்தச் சுற்றில் பங்குபற்றின. இந்தச் சுற்றுப்போட்டியின் முதலாவது அரையிறுதியாட்டம் 2 ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

இதில் இளவாலை யங்ஹென்றிஸ் அணியை எதிர்த்து கிளிநொச்சி உருத்திரபுரம் அணி மோதியது. முதற்பாதியாட்டத்தில் இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் பெற்றிருந்தன. இரண்டாவது பாதியாட்டத்தில் யங்ஹென்றிஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பு வீணடிக்கப்பட்டது. இரண்டாவது பாதியாட்டத்தில் மேலதிக கோல்கள் அடிக்கப்படவில்லை. ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் பெற்றிருந்தன. வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நடத்தப்பட்டது.

இதில் இளவாலை யங்ஹென்றிஸ் அணி, 03:02 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிக்குள் நுழைந்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.