உள்ளுர் செய்திகள்

பெண்கள் கரப்பந்தாட்டத்தில் சம்பியனாகிய வசாவிளான் வயவன் அணி

பெண்கள் கரப்பந்தாட்டத்தில் சம்பியனாகிய வசாவிளான் வயவன் அணி

மல்லாகம் ஸ்ரீ முருகன் ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் 45 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பெண்கள் கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்று நடத்தப்பட்டது.

கழக மைதானத்தில், 23 ஆம் திகதி ஆரம்பமாகிய இந்தச் சுற்றுப்போட்;டியின் இறுதிப்போட்டியும் அன்றைய தினமே நடைபெற்றது. இதில், வசாவிளான் வயவன் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து உரும்பிராய் கணேசா விளையாட்டுக்கழக அணி மோதியது.

மூன்று செற்களைக் கொண்டமைந்ததாக இந்த இறுதிப்போட்டி நடைபெற்றது. வசாவிளான் வயவன் அணி, முதல் இரண்டு செற்களையும் 25:21, 25:17 என்ற அடிப்படையில் வென்று சம்பியன் கிண்ணத்தை வென்றது.

வசாவிளான் வயவன் அணியின் ஏழிசை இறுதிப்போட்டியின் சிறந்த வீராங்கனையாகவும், உரும்பிராய் கணேசா அணியின் தர்சி தொடரின் சிறந்த வீராங்கனையாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.