Foot Ball

தேசியத்தில் 40 வருடங்களின் பின்னர் சாதனை படைத்த மகாஜனாக் கல்லூரி அணி

தேசியத்தில் 40 வருடங்களின் பின்னர் சாதனை படைத்த மகாஜனாக் கல்லூரி அணி

தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுப்பிரிவு கால்ப்பந்தாட்டப் போட்டியில், கொழும்பு கந்தானை டி மெசனோல்ட் வித்தியாலயத்தை வீழ்த்தி, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி சம்பியனாகியது.

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி, 18 ஆம் திகதி நடைபெற்ற காலிறுதியாட்டத்தில், கண்டி மாவனெல்ல படுறியா முஸ்லீம் மகா வித்தியாலய அணியை 03:00 என்ற கோல் கணக்கிலும், தொடர்ந்து அன்றைய தினம் நடைபெற்ற அரையிறுதியில் திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரியை, சமநிலை தவிர்ப்ர் உதையில் 04:2 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருந்தது.

அனுராதபுர சிறைச்சாலை மைதானத்தில் 19 ஆம் திகதி இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணியை எதிர்த்து கொழும்பு கந்தானை டி மெசனோல்ட் வித்தியாலய அணி மோதியது போட்டி நேரத்தில் இரண்டு அணிகளும் எவ்வித கோல்களையும் அடிக்கவில்லை. தொடர்ந்து சம்பியனைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. இதில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி, 03:02 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

மகாஜனா கல்லூரியின் அணித்தலைவர் வ.ஜக்சன் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாகவும், உபதலைவர் ச.கனுஜன் தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

தேசிய மட்டப் பாடசாலைகளுக்கிடையிலான கால்ப்பாந்தட்டப் போட்டியில், 1978 ஆம் ஆண்டு சிங்கர் வெற்றிக் கிண்ணத்தை தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி வெற்றிபெற்றிருந்த நிலையில், 40 ஆண்டுகள் கழித்து தற்போது, தேசிய மட்ட வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றியமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
மகாஜனாக் கல்லூரி அணியின் பொறுப்பாசிரியராக இ.திலீபன், பயிற்றுவிப்பாளர்களாக து.மோகனதாஸ், ச.செந்தூரன், மேலதிக பயிற்றுவிப்பாளர்களாக ச.ஜபாகர், தி.புருசோத்தமன் ஆகியோரும் கடமையாற்றியிருந்தனர்.

மேலும், மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் ஆடியிருந்த, இளவாலை யங்ஹென்றிஸ் அணி தோல்வியடைந்து, நான்காமிடத்தைப் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.