கிரிக்கெட் செய்திகள்

ஆசியத் தொடரினை அதிரடியுடன் ஆரம்பித்த ஹொங்ஹொங் வீரர்கள்

ஆசியத் தொடரினை அதிரடியுடன் ஆரம்பித்த ஹொங்ஹொங் வீரர்கள்

Nizakat Kahn
இந்தப் பெயரை எங்கோ கேட்டது போன்ற ஞாபகம் உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனால் நினைவுக்கு வரவேயில்லை.

எப்படி இந்தப் பெயர் ஞாபகத்துக்குள் வந்து தொலைத்தது என்று யோசித்துக் கொண்டேயிருந்தேன்.

தற்செயலாக கடந்த வருட ஹொங்ஹொங் சிக்சர்ஸ் ஸ்கோர்கார்ட்டினைத் தேடிப் பார்த்தேன்.
2017இல் தொடராட்ட நாயகனாக வந்துள்ளார்.
192 எனும் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களை ஹொங்ஹொங் சிக்சர்ஸ் தொடரில் பெற்றுள்ளார்.

பாக்கிஸ்தானைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தனது கன்னி ஒருநாள் போட்டியில் 2014இல் அறிமுகமாகியிருந்தார்.

சகல துறை ஆட்டக்காரராக விளங்கும் இவர் முறையற்ற முறையில் பந்து வீசுவதாக குற்றம் சுமத்தப்பட்டு, 2015 இருபதுக்கு இருபது தகுதி காண் சுற்றுப் போட்டியிலிருந்து நிறுத்தப்பட்டார்.

இந்தப் போட்டியோடு மூன்றாவது தடவையாக அரைச்சதத்தினைப் பெற்று ஆட்டமிழந்துள்ளார்.

 

 

அவரோடு பக்கபலமாக அணியினை வழிநடத்திச் சென்ற அணித்தலைவர் அனுஷ்மன் ரத்.
Papua New Guinea அணிக்கெதிராக அவுஸ்ரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமான விக்கெட் காப்பாளத் துடுப்பாட்ட வீரரான இவர் இன்றைய போட்டியில் தனது அணிக்காக 73 ஓட்டங்களைப் பெற்று ஓட்ட உயர்வுக்கு உதவினார்.
51.69என்ற சராசரியைத் தன்னகத்தே வைத்துள்ள நல்ல தலைவராகவும் உள்ளார்.

இவர்கள் இருவரும் ஓட்டங்களை முதலாவது விக்கெட்டுக்காகத் தம்மிடையே பகிர்ந்து கொண்டுள்ளனர்

இந்த ஹொங்ஹொங் அணி மீதான எதிர்பார்ப்பு நிச்சயம் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை 👍👍

#கிருத்திகன் நடராஜா

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.