Afghanistan

ஆப்கானின் அபார ஆட்டம் – ஆசியத் தொடரிலிருந்து வெளியேறிய இலங்கை

ஆப்கானிஸ்தான் அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஆசிய தொடரின்  3வது ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் களத்தடுப்பைத்  தெரிவு செய்தது.

தொடக்க வீரர்களாக முகமது ஷேசாத் மற்றும் ஜனத் ஆகியோர் விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் முறையே 34 மற்றும் 45 ஓட்டங்களை எடுத்தனர். அதை தொடர்ந்து ரஹ்மத் ஷா களமிறங்கினர். இவர் 72 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 249 ஓட்டங்களை எடுத்திருந்தது.

250 ஓட்டங்கள் பெற்றால்  வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது.

மேலும் அந்த அணியினர் சிறந்த களத்தடுப்பை வெளிக்காட்டினர்.

 

இறுதியாக 41.2 ஓவர்கள் முடிவில் 158 ஓட்டங்களுக்கு இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக தோற்றுப்போனது. இலங்கை அணியில் உபுல் தரங்கா 36 ஓட்டங்களும், திசாரா பெராரா 28 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.

ஆசிய கோப்பை விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியை சேர்ந்த ரஹ்மத் ஷா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

அந்த வகையில் இலங்கை அணி இரு போட்டிகளிலும் தோற்றதால், ஆசியத் தொடரிலிருந்து வெளியேறியது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.