Bangladesh

ஒற்றை கையால் துடுப்பெடுத்தாடிய தமீம் – காணொளி இணைப்பு

இலங்கைக்கு எதிரான முதலாவது போட்டியில்,  லக்மல் வீசிய  இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில், தமிம் இக்பாலின் இடது மணிக்கட்டு பகுதியில் பந்து பலமாக தாக்கியது. இதனால மைதானத்தை விட்டு, ‘ரிட்டையர்டு ஹர்டு’ முறையில் மைதானத்தை விட்டு வெளியேறினார் தமிம்.

இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச்சென்றனர். அதில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் இடது ஆள்காட்டி விரலில், லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு தமிம் இக்பால் மீண்டும் மைதானத்துக்கு திரும்பினார்.

இந்நிலையில் வங்கதேச அணி, 229 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்த போது, தமிம் உடைந்த விரலுடன் துடுப்பெடுத்தாட  களமிறங்கினார். ஒருபுறம் இவர் அணிக்கு கை  கொடுக்க, மறுபுறம்  முஷ்பிகுர் ரஹீம், அணியின் ஓட்டங்களை  உயர்த்தினார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.