England

இங்கிலாந்து மண்ணில் மண் கவ்விய இந்திய அணி

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில், மூன்று போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்ட நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில்  வென்று துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பின் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 292 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

பின் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழப்புக்கு 423 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இடை நிறுத்தியது. முதல் இன்னிங்சில் பெற்ற 40 ஓட்டங்கள் முன்னிலை சேர்ந்து 464 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சிசில துடுப்பெடுத்தாட  களமிறங்கியுள்ளது.

வெற்றி  இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் 1 ஓட்டத்திலும், அடுத்து வந்த புஜாரா மற்றும் கோஹ்லி ஓட்டம் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறினர்.

பின்னர் கே.எல் ராகுல் 149 ஓட்டங்கள்களும், ரிஷப் பண்ட் 114 ஓட்டங்கள்களும் எடுத்து கைகொடுத்தாலும் மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓட்டங்கள்களும் குவிக்க தவறியதால் 345 ஓட்டங்கள்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இதன் மூலம் 118 ஓட்டங்கள்கள் வித்தியாசத்தில்  இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி, ஓய்வு பெறும் அலெய்ஸ்டர் குக்கை வெற்றியுடன் வழியனுப்பி வைத்தது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.