England

THANK YOU CHEF

குக் இந்தப் பெயர் இங்கிலாந்து இரசிகர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் இரசிகர்களின் விருப்பத்துக்குரிய பெயராகவே இருந்து வருகிறது.

தற்பொழுது நடைபெற்று வரும் இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி தான் இவரது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிற்குமான இறுதி போட்டியாக அமைந்து உள்ளது.

ஏற்கனமே ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து 2014ம் ஆண்டு ஓய்வு பெற்றிருந்தார்.

2006ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தனது அறிமுகத்தை சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிகழ்த்திய அதே வேலை, தனது இறுதி போட்டியையும் அதே இந்திய அணியுடனேயே விளையாடி தற்பொழுது ஓய்வு பெறவுள்ளார். இந்த முதலாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த பெருமையும் குக்கிற்கு உள்ளது.

மொத்தமாக 161 டெஸ்ட் போட்டிகளில் 291 டேட்ஸ் போட்டிகளில் விளையாடி, 12472 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இந்த ஓட்டங்கள் உலக டெஸ்ட் அரங்கில் தனிநபர் ஒருவர் பெற்றுக் கொண்ட ஐந்தாவது அதிக ஓட்டங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

294 எனும் அதிகபட்ச இனிங்க்ஸ் ஓட்டத்தையும், 45.35 எனும் சராசரியையும் தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ள குக் 1441 நான்கு ஓட்டங்களையும் 11 ஆறு ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

ஐந்து தடவைகள் இரட்டைச் சதத்தினைப் பெற்றுள்ளார். மேலும் 33 தடவைகள் சதத்தினையும், 57 தடவைகள் அரைச்சதத்தினையும் கடந்துள்ளார்.

16 தடவைகள் ஆட்டமிழக்காமலும், 9 தடவைகள் ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையிலும் பெவிலியனுக்குத் திரும்பியுமுள்ளார்.

அன்ட்ருவ் ஸ்டார்ஸ் உடன் இந்தியாவிற்கு எதிரான தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் 6௦ ஓட்டங்களைப் பெற்று, முதலாவது அரைச் சதத்தினை முதலாவது இனிங்க்சிலேயே பெற்றுக் கொண்டார். இரண்டாவது இனிங்க்சில் ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களைப் பெற்று, இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் பதினாறாவது வீரராக தனது கன்னிப் போட்டியில் சத்ததினைக் கடந்த வீரராக தனது பெயரை மாற்றினார். மேலும் அவரது முதலாவது சதம், சர்வதேச பட்டியலில் மூவாயிரமாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

2011 பருவகாலத்தில் இவரது சராசரி 84.27 எனும் உயர்வான பெருமைதைக் கொண்டிருந்தது.  அந்தப் பருவகாலத்தில் எட்டு டெஸ்டுகளில் 11 இனிங்சுகளில் விளையாடி 927 ஓட்டங்களிக் குவித்தார். அதனுள் நான்கு சதங்களும், இரு அரைச்சதங்களும் அடங்கும். இந்த பருவகாலத்தில் தான் 294 எனும் தனது அதிகப்பட்ச ஓட்டங்களை, இந்தியாவுக்கு எதிராகப் பெற்றுக் கொண்டார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக 57.96 எனும் அதி உயர்வான சராசரியைப் பெற்றுள்ளார். இந்தியாவிற்கு எதிராக 7 சதங்களையும், மேற்கிந்திய தீவுகளுக்கெதிராக 6 சதங்களையும், பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியாவுக்கு எதிராக 5 சதங்களையும் பெற்றுள்ளார்.

தந்து சொந்த நட்டு மைதானத்தை விட, பங்களாதேஷ் மைதானத்தில் 61.57 எனும் சரசரியைப் பெற்றுள்ளார்.   இங்கிலாந்து மைதானங்களில் 44.37 எனும் சராசரியினையே தன்னகத்தே வைத்துள்ளார்.

ஆஷஸ் போட்டிகளிலும் குக் தனது சிறப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். 35 போட்டிகளில் 64 இனிங்க்சுகளில் விளையாடி, 2493 ஓட்டங்களை 40.20 எனும் நல்லதொரு சராசரியில் பெற்றுக் கொண்டுள்ளார்.  ஆட்டமிழக்காமல் 244 ஓட்டங்கள் பெற்றதே ஆஷஸ் தொடரில், அவுஸ்ரேலியாவுக்கு எதிராகப் பெற்றுக் கொண்ட அதிக ஓட்ட எண்ணிக்கையாகும். 5 சதங்களையும், 11 அரைச்சதங்களையும் கடந்துள்ளார்.

ஆஷஸ் தொடரில், 15 போட்டிகளுக்குத் தலைமை தாங்கியுள்ள குக், அதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் இரு போட்டிகளில், வெற்றி தோல்வியற்ற முடிவுகளையும் பெற்றுள்ளார்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் வரிசயில் சுனில் கவாஸ்கர் 1௦௦௦௦ ஓட்டங்களைக் கடந்த வீரராவார். அவருக்கு அடுத்ததாக குக் தான் பத்தாயிரம் ஓட்டங்களைக் கடந்தார். அதே வேளை ஆரம்ப ஆட்ட வீரராக களமிறங்கும் குக் மாத்திரம் தான் இதுவரை 11000 ஓட்டங்களைக் கடந்த வீரராவார்.

இப்படியான சாதனைகளுக்கு சொந்தமான குக், இந்தத் தொடரோடு ஓய்வு பெறுவது கவலையை அளித்தாலும், தனது இறுதி டெஸ்ட் போட்டியிலும் சதத்தோடு தான் ஓய்வு பெறுகிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமே.

அதுவும் தனது முதலாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிகளில் ஒரே அணிக்கெதிராக  விளையாடி, சதத்தினைக் கடந்த பெருமை குக்கினை மட்டுமே சாரும்.

சரியான நேரத்தில் தந்து ஓய்வினை அறிவித்து விலகிச் செல்லும் அல்ச்டைர் குக்கிற்கு விளையாட்டு.கொம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

#கிருத்திகன்_நடராஜா

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.