உள்ளுர் செய்திகள்

ஜெயரூபன் ருத்திரதாண்டவம் – அரையிறுதியில் கே.சி.சி.சி. ஜொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக்கழகம்

ஜெயரூபன் ருத்திரதாண்டவம் – அரையிறுதியில் கே.சி.சி.சி. ஜொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக்கழகம்

யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையில் 30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுப்போட்டியொன்றை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தி வருகின்றது.

இந்தச் சுற்றுப்போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டி 1 ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியை எதிர்த்து யூனியன்ஸ் அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய யூனியன்ஸ் அணி, 30 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 164 ஓட்டங்களை எடுத்தது. தயாளன் 30, மோகன்ராஜ் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் கே.சி.சி.சி அணி சார்பாக, நிமலதாஸ் 3 விக்கெட்களையும், சத்தியன் 2, சாம்பவன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

165 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, ஏலாளசிங்கம் ஜெயரூபனின் ரூத்திரதாண்ட அதிரடிச் சதத்தின் உதவியுடன், 17.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஜெயரூபன் 2 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். ஜனுதாஸ் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.