உள்ளுர் செய்திகள்

யாழ்ப்பாணம் சுப்பர் லீக் இருபது – 20 சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்படவுள்ளது

யாழ்ப்பாணம் சுப்பர் லீக் இருபது – 20 சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்படவுள்ளது

யாழ் மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ்.மாவட்ட துடுப்பாட்ட வீரர்களை ஒருங்கிணைத்து, யாழ்ப்பாணம் சுப்பர் லீக் என்னும் இருபது – 20 சுற்றுப்போட்டியொன்று நடத்தப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் தலைவர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், சங்கத்தால், பெயரிடப்பட்ட தலா 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் 8 அணிகள் ஏலத்தில் விடப்படும் அந்த அணிகளை ஏலத்தில் எடுப்பது தொடர்பில் பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்படும். அதிக தொகையை ஏலத்தில் கேட்கும் உரிமையாளர்கள் அணிகளை ஏலத்தில் எடுப்பார்கள்.

தொடர்ந்து, வீரர்களுக்கான ஏலம் நடைபெறும் போது, அணியின் 15 வீரர்களையும். 75 ஆயிரம் ரூபாய்க்குள் ஏலத்தில் எடுக்க வேண்டும். உரிமையாளரே அணியின் முகாமையாளர் மற்றும் பயிற்றுவிப்பாளர்களை நியமிக்கமுடியும்.

உரிமையாளர் அணியை ஏலம் எடுக்கும் முழுத்தொகையும் சங்கத்துக்கு வழங்கப்படுவதுடன், அதில் அரைவாசித் தொகையானது அணிகளின் பராமரிப்பிற்காக மீளவும் வழங்கப்படும்.

யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களின் வீரர்கள், தலா 500 ரூபாய் செலுத்தி ஏலத்தில் தங்களை பங்கெடுத்துக்கொள்ள முடியும். அணிகளின் தெரிவில், ஒரு அணியில், ஒரே கழகத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் மாத்திரம் இருக்க முடியும் என்பதுடன், போட்டியின் போது 4 பேர் மாத்திரம் விளையாடவும் முடியும்.

ஏலத்தில் எடுக்கப்படும் வீரர்கள் சுற்றுப்போட்டி முடியும் வரை உரிமையாளரின் விதிமுறைக்குட்பட்டு இருத்தல் வேண்டும். ஏலத்தொகை வீரர்களுக்கு வழங்கப்படமாட்டாது மாறாக அணியின் வெற்றி பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

தெரிவு செய்யப்படும் வீரர்கள் தகுந்த காரணமின்றி இடைநடுவில் விலகினால் சங்கத்தின் ஒழுக்காற்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.

இதற்கான விண்ணப்பங்கள் யாவும் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்படவேண்டும். இத்தினத்தில் மாலை 4 மணிக்கு அனைத்து விண்ணப்பங்களும் திறக்கப்பட்டு அணி உரிமையாளர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.