England

246 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து அணி

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் மூன்று  போட்டிகள் முடிவில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது.

இதில் நாணயச் சுழற்சியில்  வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர்  ரூட் துடுப்பட்டத்தைத் தெரிவு செய்தார்.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ் ஓட்டம்  எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய  ரூட் 4 ஓட்டத்தில்  இஷாந்த் சர்மா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு, இந்திய பந்துவீச்சில் திணற தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள் பைர்ஸ்டாவ், ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் ஆகியோரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இவர்கள் முறையே 6, 23 மற்றும் 21 ஓட்டங்களுக்கு வெளியேறினர்.

ஒருகட்டத்தில் இங்கிலாந்து அணி 86/6 என தவித்தது. அடுத்ததாக களமிறங்கிய மொயின் அலி மற்றும் சாம் கர்ரன் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 81 ஓட்டங்கள் எடுத்திருந்த  போது, மொயின் அலி 40 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடைசி வரை நின்று ஆடிய சாம் கர்ரன் 78 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 249 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும், அஸ்வின், இஷாந்த் மற்றும் சமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆரம்பித்த  இந்திய தொடக்க வீரர்கள் கே எல் ராகுல் மற்றும் தவான் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் முதல் நாள் முடிவில் இந்தியா 19/0 என இருந்தது. தவான் 3 ரன்களுடனும், ராகுல் 11 ஓட்டங்களுடன்  களத்தில் இருந்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.