Foot Ball

சிறப்பான தடுப்பாட்டத்தால் கிளியூர் கிங்ஸ் அணி இறுதியில் தேவையான நேரத்தில் அதிரடியாட்டம்

சிறப்பான தடுப்பாட்டத்தால் கிளியூர் கிங்ஸ் அணி இறுதியில் தேவையான நேரத்தில் அதிரடியாட்டம்
பெற்ற கோலை சிறப்பாக தக்கவைத்து அசத்தலான தடுப்பாட்டம் ஆடி, வல்வை எப்.சி அணியை வீழ்த்தி, கிளியூர் கிங்ஸ் அணி இறுதிக்குள் நுழைந்தது.
வடக்கு, கிழக்கு வீரர்களை உள்ளடக்கிய வகையில், அவர்களின் திறன்களை வளர்க்கும் வகையில், வடக்கு, கிழக்குப் பிறிமியர் லீக் சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வந்தன. 12 அணிகள் பங்குபற்றிய இந்தச் சுற்றுப்போட்டியில், ரில்கோ கொங்கியூறஸ் அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.
இந்நிலையில், இறுதிப்போட்டிக்குள் நுழையும் இரண்டாவது அணியை இனங்காணும் போட்டியானது 23 ஆம் திகதி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் வல்வை எப்.சி அணியை எதிர்த்து கிளியூர் கிங்ஸ் அணி மோதியது.
எதிர்பார்ப்புக்கு மாறாக இன்றைய போட்டியில் வல்வை எப்.சி அணியின் ஆட்டம் மந்தமாக மைதானத்தில் வெளிப்பட்டது. 24 ஆவது நிமிடத்தில் கிளியூர் அணிக்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை, ஜோப் மைக்கல் கோலாக மாற்றினார். அதன் பின்னர், கிளியூர் அணி சிறப்பான தடுப்பாட்டம் ஆடியது.
கிளியூர் தடுப்பாட்டத்தை மீறி வல்வை எப்.சி அணியினால் அந்தத் தடுப்பை உடைக்க முடியவில்லை. 61 ஆவது நிமிடத்தில், கிடைத்த கோனர் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய கிளியூர் அணியின் எஸ்.டிலக்ஸன் தலையால் மோதி சிறப்பான கோலை அடித்தார்.
இதன் பின்னர் ஆட்டத்தில் எவ்வித முன்னேற்றத்தையும் வல்லை எப்.சி அணியினால் மேற்கொள்ள முடியவில்லை. கிடைத்த 3 அருமையான சந்தர்ப்பங்களையும் வல்வை அணியின் முன்னணி வீரர்கள் வீணாக்கினர்.
முடிவில், கிளியூர் கிங்ஸ் அணி, 02:00 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் கிளியூர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ரில்கோ கொங்கியூறஸ் அணியுடன் மோதவுள்ளது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.