ஏனைய செய்திகள்

ஜகர்த்தாவில் உயர்தரப் பரீட்சை எழுதும் இலங்கை நீச்சல் வீரன்

பதினெட்டாவது ஆசிய போட்டிகள் தற்சமயம் ஜகர்த்தா மற்றும் பல்மங் இடங்களில் இடம்பெற்று வருகிறது.

சென்.பீட்டர்ஸ் கல்லுரியினைச் சேர்ந்த பீரிஸ் இந்த ஆசியப்  போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

ஏற்கனமே இலங்கைக்காக பல சாதனைகளை நீச்சலில் சாத்தித்த இவர், இந்த முறை உயர் தரத்தில் தோற்றுகிறார்.

அந்தவகையில் இந்த ஓகஸ்ட் மாதத்தில் ஆசியப் போட்டிகளும், உயர்தரப் பரீட்ச்சையும் ஒன்றாக வந்து அவருக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக இலங்கைக் கல்வி அமைச்சு விசேடமாக ஒரு தீர்வினை வழங்கி இருந்தது. பரீட்சைகள் இங்கு நடைபெறும் அதே தினத்தில் ஜகர்த்தாவில்   அவருக்கான பரீட்சை நடைபெறுவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் நேற்றைய தினம் ஆங்கிலப் பரீட்சையில் தோற்றி உள்ளார். தொடர்ந்து இன்று நடைபெறவுள்ள பொருளியல் பரீட்சையிலும் தோற்றவுள்ளார். இவருக்காக இரண்டு பரீட்சை மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கான செலவை இலங்கைக்கான ஒலிம்பிக் சங்கம் NOCSL பொறுப்பெடுத்துள்ளது.

இவர் சாதாரண தரத்தில் அனைத்துப் பாடங்களிலும் அதி உயர் சித்தி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.