Sri Lanka

SLC T20 நாளை ஆரம்பமாகவுள்ளது

இலங்கை கிரிக்கெட் சபையால் நடத்தப்படவுள்ள SLC T20  நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது. நாளைய தினம் ஆரம்பமாகி, செப்டெம்பர் மாதம் 2ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்யூஸ், திசர பெரேரா மற்றும் சுரங்க லக்மால் முறையே கொழும்பு, கண்டி, தம்புள்ள மற்றும் காலி அணிகளுக்குத் தலைமை தாங்குகின்றனர்.

ஒவ்வொரு அணியிலும் 21 வீரர்கள் வீதம் மொத்தம் நான்கு அணியிலும் சேர்த்து 84 வீரர்கள் பங்குபற்றுகின்றனர்.

ஒவ்வொரு அணியும் 6 போட்டிகள் விளையாடும். புள்ளிகள் அடிப்படையில் முதலிரு இடங்களையும் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

இந்த சுற்றுப் போட்டிகள் மூலமாக இலங்கை அணியின் திறமை வாய்ந்த இருபதுக்கு இருபது வீரர்கள் வெளிக்கொண்டுவரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.