Foot Ball

ரில்கோ கொங்கியூறஸ் அணி பிளே ஓவ் சுற்றுக்கு தகுதி – மற்றைய மூன்று அணிகள் தெரிவில் கடும் போட்டி

ரில்கோ கொங்கியூறஸ் அணி பிளே ஓவ் சுற்றுக்கு தகுதி – மற்றைய மூன்று அணிகள் தெரிவில் கடும் போட்டி

வடக்கு கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின் போட்டிகள் தற்போது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் கிளிநொச்சி உதயதாரகை மைதாங்களில் நடைபெற்று வருகின்றது.

வெற்றிபெறும் அணிக்கு 5 மில்லியன் ரூபாய் பரிசுப்பொதி வழங்கும் வகையில், இலங்கையிலேயே மிகப்பிரமாண்டமான முறையில், இந்தச் சுற்றுப்போட்டியானது ஏற்பாடு செய்யப்பட்டது. வீரர்கள் 12 அணிகளில் உள்வாங்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் ஒரு தடவை மோதவேண்டும் என்ற அடிப்படையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் முதற்சுற்று லீக் ஆட்டத்தில் மொத்தமாக 66 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதற்சுற்றில் முன்னிலை வகிக்கும் 4 அணிகள் பிளே ஓவ் போட்டிக்குத் தகுதி பெறும்

அந்த வகையில், இதுவரையில் நடைபெற்ற 9 போட்டிகளில், 8 போட்டிகளில் வெற்றிபெற்று 24 புள்ளிகளுடன் ரில்கோ கொங்கியூறஸ் அணி முதலிடத்திலுள்ளதுடன், முதல் அணியாக பிளே ஓவ் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

தொடர்ந்து, மன்னார் எப்.சி அணி, 9 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்று 20 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்திலும், கிளியூர் கிங்ஸ் அணி, 9 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்று 19 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும், வவுனியா வோரியர்ஸ் அணி, 9 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்று 18 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்திலும் உள்ளது.

வல்வை எப்.சி (17 புள்ளிகள்), தமிழ் யுனைட்டட் (12 புள்ளிகள்), முல்லை பீனிக்ஸ் (12 புள்ளிகள்), ரிங்கோ ரைரன்ஸ் (10 புள்ளிகள்), நொர்தேன் எலைட் (08 புள்ளிகள்), மாதோட்டம் எப்.சி (4 புள்ளிகள்), மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் (4 புள்ளிகள்), அம்பாறை அவஞ்சேர்ஸ் (1 புள்ளி) என தொடர்ந்து வரும் இடங்களில் உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.