England

இனிங்ஸ் தோல்வியடைந்த இந்தியா – இங்கிலாந்தில் பரிதாபம் – காணொளி இணைப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இனிக்ஸ் மற்றும்   159 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.

லோர்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது  டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. இதில், முதல் நாள் மழை காரணமாக நடக்கவில்லை. இரண்டாம் நாளில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 107 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது.

பந்துவீச்சில் அன்டர்சன் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 369 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், 289 ஓட்டங்கள் முன்னிலையில் தனது ஆட்டத்தை நிறுத்தியது.

இங்கிலாந்தின் பாரிஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ் முறையே 93, 137* ஓட்டங்கள்  எடுத்தனர்.

இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி தான். முதன் இன்னிங்சைப் போன்று, இதிலும் இந்திய வீரர்கள் வரிசையாக வெளியேறினர். முரளி விஜய், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் டக் அவுட் முறையில் வெளியேறினர். இதில், அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், இந்திய அணி 47 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்று இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.

அன்டேர்சன் மற்றும் ப்ரோட் தலா நான்கு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக  கிரிஸ் வோக்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இதன் மூலம், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இந்தியா 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 18ம் திகதி நோட்டிங்காமில் ஆரம்பமாகவுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.