Bangladesh

இருபதுக்கு இருபது தொடரைக் கைப்பற்றிய பங்களாதேஷ் அணி

மேற்கிந்திய  தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில் வங்கதேச அணி, 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரை 2-1 என கைப்பற்றி வங்கதேச அணி அசத்தியது.

மேற்கிந்திய  தீவுகள் சென்றுள்ள வங்கதேச அணி 3 இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில், மேற்கிந்திய  தீவுகள் அணி வென்றது. இரண்டாவது போட்டியில் வங்கதேச அணி வென்றது. இரு அணிகள் மோதிய மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டி லாடர்ஹிலில் நடந்தது.

இதில் முதலில் நாணயச் சுழற்சியில்  வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிதான் தாஸ் (61), மகமுதுல்லா (32) ஆகியோர் கைகொடுக்க, அந்த அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 184 ஒட்டங்கள் எடுத்தது.

கடின இலக்கை துரத்திய மேற்கிந்திய  தீவுகள் அணிக்கு ரசல் (47) தவிர மற்ற வீரர்கள் ஏமாற்ற, மேற்கிந்திய  தீவுகள் அணி 17.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 135 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து மழை குறுக்கிட, போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தொடர்ந்து பலத்த மழை நீடித்ததால், டக்வொர்த் லூவிஸ் முறைப்படி, வங்கதேச அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரை 2-1 என கைப்பற்றி வங்கதேச அணி அசத்தியது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.