Home

தரநிலையில் முதலிடத்தை தட்டிய கோஹ்லி…!

தரநிலையில் முதலிடத்தை தட்டிய கோஹ்லி…!

விராட் கோலி இன்று வெளியிடப்பட்ட ICC டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் இடம் பிடித்த்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி கண்டது. இதையடுத்து இங்கிலாந்து அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 149 ஓட்டங்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 51 ஓட்டங்களை கோஹ்லி பெற்றார்.

ஏழு வருடங்களுக்கு பிறகு இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

முன்னதாக 2011-ம் ஆண்டு முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ICC டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார்.
டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கௌதம் கம்பீர், சுனில் கவாஸ்கர், விரேந்தர் சேவாக், திலீப் வெங்சர்கர் ஆகியோருக்கு பின்னர் ஏழாவது இந்திய வீரராக கோஹ்லி முதலிடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.