Foot Ball

நேரத்தை மாற்றுங்கள் FIFA vs WIMBLEDON

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15.07.2018) உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியும் விம்பிள்டன் ரென்னிஸ் தொடரின் ஆடவர் இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளமை போட்டியை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்கும் ரசிகர்களுக்கும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் இங்கிலாந்து நேரப்படி பிற்பகல் இரண்டு மணிக்கு விம்பிள்டன் தொடரின் ஆடவர் இறுதிப்போட்டியும் உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்து நேரப்படி மாலை நான்கு மணிக்கும் ஆரம்பமாகவுள்ளது.

இவ்விரண்டு இறுதிப்போட்டிகளும் ஆரம்பமாகும் நேரத்திற்கிடையில் இரண்டு மணிநேர வித்தியாசங்கள் இருந்தாலும் போட்டி ஒளிபரப்பை இது பாதிக்கும் எனக்கருதப்படுகின்றது.

இதற்குக் காரணம் 2002 ஆம் ஆண்டில் இருந்து விம்பிள்டனில் நடைபெறும் ஆடவர் இறுதிப்போட்டியின் சராசரரி நேரம் 2 மணித்தியாலங்களும் 53 நிமிடங்களும் ஆகும். எனவே அதனை வைத்துப்பார்க்கும் பொழுது ரென்னிஸ் இறுதிப்போட்டியைப் பார்வையிடும் ரசிகர் ஒருவர் உலகக் கிண்ண இறுதிப்போட்டியின் முதற்பாதி ஆட்டத்தை தவறவிடுவதற்கான வாய்ப்புள்ளது.

இது குறித்து All England Lawn Tennis and Croquet Club இன் ஊடகத்துறை பணிப்பாளரான மிக் டெஸ்மண்ட்

‘ உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்து நேரப்படி மாலை 4 மணிக்கு ஆரம்பமாக இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

ஏனென்றால் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் நான்கு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறுவது. ஆனால் விம்பிள்டன் தொடர் 140 ஆண்டுகளாக வருடந்தோறும் நடைபெற்று வருவது.

இத்தொடரின் ஆடவர் இறுதிப்போட்டி எப்போதுமே இங்கிலாந்து நேரப்படி பிற்பகல் இரண்டு மணிக்கு நடைபெறுவது தான் வழமையானது.

உதைபந்தாட்ட இறுதிப்போட்டியை ரஷ்ய நேரப்படி மாலை 6மணிக்கு நடத்துவதென்ற முடிவு 2015 டிசெம்பர் 3 ஆம் திகதி எடுக்கப்பட்டதாகும். அப்போது இது குறித்து ஒருவரும் சிந்திக்கவில்லை. ஆனால் தற்போது தான் அதனை உணர்ந்துள்ளார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே போட்டியைப் பார்வையிடும் ரசிகர்கள் மற்றும் உலகளாவிய ரீதியில் போட்டியை ஒளிபரப்புச் செய்யும் நிறுவனங்களின் வணிக ரீதியான அனுகூலங்களைக் கருத்திற்கொண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டி ஆரம்பமாகும் நேரத்தை பிபா மாற்றவேண்டுமென விம்பிள்டன் ஏற்பாட்டுக் குழுமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

ஆனாலும் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே தோன்றுகிறது.

#விமலன்_சின்னராஜா

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.