Foot Ball

தமிழ் யுனைட்டட் அணி வெற்றி

தமிழ் யுனைட்டட் அணி வெற்றி
வடக்கு கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின், மூன்றாவது லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

இந்தச் சுற்றுப்போட்டியில் முதல் லீக் போட்டியில் 19 ஆவது போட்டியில் தமிழ் யுனைட்டட் அணியை எதிர்த்து ரிங்கோ ரைரன்ஸ் அணி மோதியது.

முதற்பாதியாட்டத்தில் தமிழ் யுனைட்டட் அணி முதலாவது கோலை அடித்தது. சிறிது நேரத்தில் ரிங்கோ ரைரன்ஸ் அணி பதில் கோலைப் போட்டது. முதற்பாதியாட்டம் 1:1 என சமநிலையில் முடிவடைந்தது.

இரண்டாவது பாதியாட்டத்தில் தமிழ் யுனைட்டட் அணி, மேலும் ஒரு கோலை அடித்து, தமது வெற்றியை உறுதி செய்தது.

தமிழ் யுனைட்டட் அணி சார்பாக இரண்டு கோல்களை அடித்த ஜெகன் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.