Sri Lanka

உடைப்பவன் யாராகவும் இருக்கலாம்; ஆனால் படைப்பது இலங்கை தான்…!!

வேகப் பந்துவீச்சிற்கு மிகவும் சாதகத்தை வழங்கும் பார்படோஸ் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் அபார வெற்றி பெற்ற இலங கை அணி முதன்முறையாக இம்மைதானத்தில் டெஸ்ட் போட்டியை வென்ற ஆசிய அணியாக மகுடம் சூடி வரலாறு படைத்துள்ளது.

இதுவரை பார்படோஸ் மண்ணில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி எந்தவொரு போட்டியையும் வெல்லாத நிலையில் 7 போட்டிகளில் படுதோல்வியை அடைந்துள்ளதோடு இரண்டு போட்டிகளை ட்ராவில் முடித்துள்ளது.

குறிப்பாக 2002 இல் கங்குலி தலைமையிலான அணி இம்மைதானத்தில் படுதோல்வி அடைந்த அதே வேளை, 2011 இல் தோனி தலைமையிலான அணி ஆட்டத்தை ட்ராவில் முடித்தது.

அதே போன்று இம்மைதானத்தில் பாகிஸ்தான் அணி 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் வெல்லாத நிலையில் 4 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து 3 போட்டிகளை ட்ராவில் முடித்துள்ளது.

குறிப்பாக 1988 இல் இம்ரான் கான் தலைமையிலான அணி, 1993 இல் வசீம் அக்ரம் தலைமையிலான அணி மற்றும் 2017 இல் மிஸ்பா தலைப்பிலான அணி என மேற்கிந்திய தீவுகளிடம் படுதோல்வியைச் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் லக்மால் தலைமையிலான இளம் இலங்கை அணி விளையாடிய கன்னிப் போட்டியிலேயே வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளமை சிறப்பம்சமாகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.