Foot Ball

மன்னார் எப்.சி அணி வெற்றி

மன்னார் எப்.சி அணி வெற்றி
வடக்கு கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின், இரண்டாவது லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதில் 14 ஆம் திகதி இரவு நடைபெற்ற போட்டியில் மன்னார் எப்.சி அணியை எதிர்த்து நொதேர்ன் எலைட் அணி மோதியது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் எலைட் அணிக்கு மிகவும் இலகுவான இரண்டு வாய்ப்புக்கள் கிடைத்தன. எனினும் அதனை கோலாக்குவதில் அவர்கள் தவறுவிட்டன.
கோல் எதனையும் பதிவு செய்யாத வகையில் முதற்பாதியாட்டம் நிறைவுக்கு வந்தது.
இரண்டாவது பாதியாட்டத்தின் இறுதி நேரத்தில் மன்னார் எப்.சி அணி தனது முதலாவது கோலை அடித்தது. ஆட்டநேரம் முடியும் வரையில் அந்தக் கோல் நீடிக்க, மன்னார் எப்.சி அணி, 01:00 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

#குணசேகரன்_சுரேன்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.