கிரிக்கெட் செய்திகள்

நான்காவது தர்மமுழக்கம் ஆரம்பம்

நான்காவது தர்மமுழக்கம் ஆரம்பம்

முழங்காவில் மகா வித்தியாலயம் – தர்மபுரம் மத்திய கல்லூரி ஆகியவற்றின் 19 வயதுப்பிரிவு துடுப்பாட்ட அணிகளுக்கிடையில் வருடாவருடம் இடம்பெறும் தர்மமுழக்கம் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் நான்காவது பருவகாலப் போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி முழங்காவில் மகா வித்தியாலய மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இந்த மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியானது 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. ஆரம்பிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் தர்மபுரம் மத்திய கல்லூரி அணி வெற்றியைப் பெற்றது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் முழங்காவில் மகா வித்தியாலய அணி, 7 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

இந்நிலையில், இம்முறைப் போட்டியானது நடைபெறுகின்றது. வெற்றி எண்ணிக்கையை அதிகரித்து, தர்ம முழுக்கத்தில் தங்கள் ஆதீக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற உத்வேகத்துடன், தர்மபுரம் மத்திய கல்லூரியும், வெற்றி எண்ணிக்கையைச் சமப்படுத்தி கடந்த வருட வெற்றியையும் தக்க வைக்கும் நோக்கில் முழங்காவில் மகா வித்தியாலய அணியும் களமிறங்குகின்றன.

முழங்காவில் மகா வித்தியாலயம் – முழங்காவில் மகா வித்தியாலயம், கனகரட்ணம் கஜனின் நேர்த்தியான, இளமைத் துடிதுடிப்பான பயிற்றுவிப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. அணி இம்முறை சகலதுறை வீரர் கே.கிருஸ்ணராஜ்ஜின் தலைமையில் களமிறங்குகின்றது. ரி.ஜெயந்தன் (அணி உபதலைவர், சகலதுறை வீரர்), வி.சதுஜன் (துடுப்பாட்ட வீரர்), எஸ்.தனுஜன் (துடுப்பாட்ட வீரர்), ரி.நிதர்சன் (விக்கெட் காப்பாளர், மற்றும் துடுப்பாட்ட வீரர்), எஸ்.டினோஜன் (சகலதுறை வீரர்), ரி.றஜீவன் (சகலதுறை வீரர்), எஸ்.சிலம்பரசன் (சகலதுறை வீரர்), எம்.பவிதரன் (துடுப்பாட்ட வீரர்), எம்.எழிலரசன் (பந்துவீச்சாளர்), ஜி.தனுஜன் (பந்துவீச்சாளர்), யு.சாரங்கன் (பந்துவீச்சாளர்), பிறின்சன் (பந்துவீச்சாளர்), எல்.மதுசன் ழூதுடுப்பாட்ட வீரர்). எஸ்.சஜீதரன் (துடுப்பாட்ட வீரர்) ஆகிய வீரர்கள் அணியை வலுவூட்டுகின்றனர்.

தர்மபுரம் மத்திய கல்லூரி – ஞா.யோகீசனின் சிறப்பான, அனுபவம் மிக்க பயிற்றுவிப்பின் கீழ், சிறப்பாக அணி உருவாக்கப்பட்டுள்ளது. அ.லோயேந்திரனின் தலைமையில் அணி களமிறங்குகின்றது. அணியை மேலும் பலம்சேர்க்கும் வகையில், க.ரொசான் (அணியின் உபதலைவர்), த.ஜீவிதன், க.நிவேந்திரன், த.பிரணவன், ஜெ.சுபேசன், நா.நிலக்சன், நா.யதுசன், கு.யசிந்தன், கு.சர்மிளன், த.எப்சியன், ப.துஸ்யந்தன், சு.டானியல், த.பானுசன், சி.பிரதீபன், இ.சதீசன், க.தரணீதரன் ஆகியோர் உள்ளனர். அணியின் முகாமையாளராக ம.சசிக்குமார் உள்ளார்.

#குணசேகரன்_சுரேன்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.