Foot Ball

வடகிழக்கு பிறீமியர் லீக்: நடுவரின் மோசமான தீர்ப்புக்களைத் தாண்டி வல்வை எப். சி அமோக வெற்றி

வடகிழக்கு பிறிமியர் லீக் தொடரின் இரண்டாம் வாரத்தின் மூன்றாவது ஆட்டம் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.

இவ் ஆட்டத்தில் யாழ் மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தும் அணிகளில் ஒன்றான வல்வை எப்.சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் கிளிநொச்சி மாவட்ட அணியான கிளியூர் கிங்ஸ் அணியைத் துவம்சம் செய்தது.

வல்வை அணிக்கு எதிராகவும் கிளியூர் கிங்ஸ் அணிக்கு சார்பாகவும் நடுவரால் வழங்கப்பட மிகவும் மோசமான தீர்ப்புக்களையும் தாண்டி வல்வை எப். சி அணி இலகுவான வெற்றியைப் பதிவு செய்தது முக்கிய அம்சமாகும்.

முதற்பாதி ஆட்டம்

இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆட முதற்பாதி அனல் பறந்தது. ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே கிளியூர் கிங்ஸ் வீரர்கள் பந்தைக் கோல்கம்பத்தை நோக்கி நகர்த்துவதோடு வல்வை அணி வீரர்களின் கால்களைக் குறிவைத்துத் தாக்குவதையும் இலக்காக கொண்டிருந்தார்கள்.

கிளியூர் கிங்ஸ் வீரர்கள் செய்த தவறுகளை நடுவர் கண்டும் காணாதவாறு செயற்பட பதிலுக்கு வல்லை வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். உடனடியாக அணித்தலைவர் ஞானரூபன், மதுசன், திலீபன் ஆகிய வல்வை வீரர்களுக்கு அடுத்தடுத்து மஞ்சள் அட்டைகளை வழங்கப்பட்ட போதும் கிளியூர் கிங்ஸ் வீரர்கள் செய்த பல பாரிய தவறுகளை நடுவர் கவனிக்காது விட்டார்.

முதற்பாதியின் நடுப்பகுதியில் வல்வை அணி வீரர் கோல் கம்பத்தை நோக்கி பந்தை நகர்த்த அதைப் பெற முனைந்த வல்வை வீரரை கிளியூர் கிங்ஸ் அணியின் பின்கள வீரர் கையால் ளமறித்தார். இதனால் வல்வை அணிக்கு பெனால்டி வாய்ப்புக் கிடைக்க, அந்த வாய்ப்பை அணித்தலைவர் ஞானரூபன் கோலாக்கினார்.

அதன் பின்னர் முதற்பாதியின் மேலதிக நேரத்தில் வல்லை வீரர்களால் சிறப்பாக பறிமாறப்பட்ட பந்தை அவ் அணி வீரர் கசுன் அற்புதமான கோலாக்க வல்லை அணி முதற்பாதி முடிவில் 2:0 என முன்னிலை பெற்றது.

முதற்பகுதிமுடிவு:- வல்வை எப். சி 2 : 0கிளியூர்கிங்ஸ்

இரண்டாம் பாதி

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் வல்வை அணித்தலைவர் ஞானரூபன் ஐந்து வீரர்களை லாவகமாக ஏமாற்றி கொடுத்த அற்புதமான பாஸை நட்சத்திர வீரர் பிரேம்குமார் கோலாக்க தவறினார். அதன் பின்னர் ஞானரூபனின் முழங்காலை இலக்கு வைத்து கிளியூர் கிங்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து தாக்கினார்கள்.

அதன் பின்னர் வல்வை வீரர் பிரேம்குமார் கொடுத்த பாஸை ஞானரூபன் கோலாக்க முயல கிளியூர் கிங்ஸ் கோல்காப்பாளர் அபாரமாகத் தடுத்தார். அதன் பின்னர் கிளியூர் வீரர்கள் கோல்கம்பத்தை ஆக்கிரமிக்க வல்வை கோல்காப்பாளரின் தவறினால் கிளியூர் அணிக்கு பெனால்டி வாய்ப்புக் கிடைத்தது.

அந்த பெனால்டியை கிளியூர் அணியின் வெளிநாட்டு வீரர் ஜொப் மைக்கல் உதைக்க வல்வைக் கோல்காப்பாளர் அமல்ராஜ் பாய்ந்து தடுத்தார்.

அதன் பின்னர் நேரடியாக வல்வை வீரர் பிரேம் குமாருக்கு கிடைத்த பந்தை பிரேம்குமார் கோலாக்க வல்வை அணி 3:0 என முன்னிலை பெற்றது.

போட்டியின் இறுதி நேரத்தில் வல்வை அணித்தலைவரின் முழங்கால் மீண்டும் பதம்பார்க்கப்பட அவர் சிகிச்சை பெற வந்தார். அவர் மைதானத்தில் இருந்து சிகிச்சை பெற்ற சந்தர்ப்பத்தில் ஏற்கனவே அவரை இலக்கு வைத்த நடுவர் அவருக்கு இரண்டாவது மஞ்சள் அட்டையைக் காட்டியதோடு சிவப்பு அட்டையும் காட்டி வெளியே அனுப்பினார்.

இறுதியில் வல்வை எப். சி 3:0 என வெற்றிப் பதிவு செய்ததோடு புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. ஆட்டநாயகனாக பிரேம்குமார் தெரிவானார்.

ஆட்டநேரமுடிவு:- வல்வைஎப். சி 3 : 0 கிளியூர்கிங்ஸ்

நாளைய ஆட்டம்

வடகிழக்கு பிறீமியர் லீக் தொடரின் நாளைய போட்டியில் நொர்தேர்ன் எலைட் அணியை எதிர்த்து மாதோட்டம் எப். சி மோதவுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.