Foot Ball

ரிங்கோ ரைரன் அணி வெற்றி

ரிங்கோ ரைரன் அணி வெற்றி வடக்கு கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின், இரண்டாவது லீக் சுற்று ஆட்டங்கள் 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

இதில் ரிங்கோ ரைரன் அணியை எதிர்த்து முல்லை பீனிக்ஸ் அணி மோதியது.

முதல் பாதியாட்டத்தின் 42 ஆவது நிமிடத்தில் ரிங்கோ ரைரன் அணிய்ன் எஸ்.முகமட் முதலாவது கோலை அடித்தார். தொடர்ந்து 45 ஆவது நிமிடத்தில் ரிங்கோ அணியின் ஏ.முகமட் வாரித் கோல் ஒன்றை அடித்தார். தொடர்ந்து 46 ஆவது நிமிடத்தில் ரிங்கோ அணியின் முகமட் வாரித்த அடுத்த கோலையும் அடித்தார். முதற்பாதியாட்டம் முடிவில், ரிங்கோ ரைரன் அணி, 03-00 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியாட்டத்தில் முல்லை பீனிக்ஸ் அணியின் பதிலாட்டம் மேலோங்கியது. இதன் பயனாக பொட்டியின் 81 ஆவது நிமிடத்தில் முல்லை அணியின், எஸ்.மோகராஜ் அணிக்கான முதலாவது கோலை அடித்தார். தொடர்ந்து, 90 ஆவது நிமிடத்தில் முல்லை பீனிக்ஸின் அலி அக்பர் சன்சஜன் ஒரு கோலை அடித்தார்.

முடிவில் ரிங்கோ ரைரன் அணி, 03:02 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

#குணசேகரன்_சுரேன்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.