Foot Ball

கீதனின் அதிரடி ஆட்டத்தால் பாடும் மீன் வசம் தூய ஒளி கிண்ணம்

கீதனின் அதிரடி ஆட்டத்தால் பாடும் மீன் வசம் தூய ஒளி கிண்ணம்

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் நினைவாக, புனித சூசையப்பர் விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்ட கால்ப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன், குருநகர் பாடு;ம்மீன் விளையாட்டுக்கழகத்தின் அணுசரணையில், யாழ்.மாவட்ட கழகங்களுக்கிடையில் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தியது. இறுதிப்போட்டி 10 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற போது, குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து இளவாலை யங்ஹென்றிஸ் அணி மோதியது. முதற்பாதியாட்டத்தில் ஹென்றிஸ் அணியின் ஆதீக்கம் நிலைபெற்றது. இதன் பயனாக ஹென்றிஸ் அணியின் முதலாவது கோலை தனேஸ் போட்டார். அதே உத்வேகத்துடன் ஆடிய ஹென்றிஸ் அணிக்கு, மகீபன் மேலும் ஒரு கோலைப் பெற்றுக்கொடுத்தார். முதற்பாதியாட்டத்தில் இறுதி தருணத்தில் உத்வேகமடைந்த பாடும்மீன் அணி, சரியான பந்துபரிமாற்றத்தின் மூலம் தமது முதலாவது கோலைப் பெற்றது. அந்தக் கோலை அந்த அணியின் கீதன் அடித்தார். முதற்பாதியாட்டத்தில் ஹென்றிஸ் அணி, 02:01 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியாட்டத்தில் பாடும்மீன் அணி, சிறப்பான பந்துபரிமாற்றங்களை மேற்கொண்டபோதும், ஹென்றிஸ் அணியின் பின்களத்தை உடைத்து எதையும் செய்ய முடியவில்லை. எனினும், ஒரு கட்டத்தில் அந்தத் தடையை உடைத்த கீதன் பாடும்மீன் அணிக்கு இரண்டாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார். ஆட்டநேர முடியும் போது, இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் பெற்றிருந்தன. வெற்றியாளரைத்தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதைநாடப்பட்டது. சமநிலை தவிர்ப்பு உதையில், 7:6 என பாடும்மீன் அணி வெற்றிபெற்றது. இறுதிப்போட்டியின் நாயகனாக பாடும்மீன் அணியின் கீதனும், சிறந்த கோல் காப்பாளராக ஹென்றிஸ் அணியின் அமல்ராஜ்ஜும் தெரிவு செய்யப்பட்டனர்.

பலமிக்க சென்.மேரிஸை வீழ்த்தி மகுடம் சூடிய குப்பிளான் திடமான உத்வேகத்துடன், ஆடிய குப்பிளான் குறிஞ்சிக்குமரன் அணி பலமிக்க சென்.மேரிஸ் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியொன்றைப் பதிவு செய்தது. மெலிஞ்சிமுனை இருதயராஜா விளையாட்டுக்கழகம் மாவட்டத்தின் கதாநாயகர் யார் என்ற தொனிப்பொருளில் 2016 ஆம் ஆண்டு கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்றை நடத்தி வந்தது. இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியானது பல்வேறு காரணங்களால், நடைபெறாமல் பிற்போடப்பட்டு வந்தது. இந்நிலையில், இதன் இறுதிப்போட்டியானது. 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இருதயராஜா மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஸ் அணியை எதிர்த்து குப்பிளான் குறிஞ்சிக்குமரன் அணி மோதியது. முதற்பாதியாட்டத்தில், குறிஞ்சிக்குமரன் அணியின் ரிதுசன் வழங்கிய பந்துப்பரிமாற்றத்தை கஜேந்திரன் கோலாக மாற்றினார். முதற்பாதியாட்டம் அந்தக் கோலுடன் நிறைவுக்கு வந்தது. இரண்டாவது பாதியாட்டத்தில் இரண்டு அணிகளும் எவ்வித கோல்களையும் அடிக்கவில்லை. முடிவில் குறிஞ்சிக்குமரன் அணி, 01:00 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியனாகியது. தொடரின் நாயகனாக சென்.மேரிஸ் அணியின் நிதர்சனும், தொடரின் சிறந்த கோல் காப்பாளராக குறிஞ்சிக்குமரன் அணியின் திலக்சனும் தெரிவு செய்யப்பட்டனர்.
#குணசேகரன்_சுரேன்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.