Foot Ball

மெஸ்சியின் சாதனையை சமன் செய்த சுனில் செத்ரி-கிண்ணம் வென்றது இந்திய அணி

மெஸ்சியின் சாதனையை சமன் செய்த சுனில் செத்ரி-கிண்ணம் வென்றது இந்திய அணி.

இன்டர்கான்டினென்டல் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணித்தலைவர் சுனில் செத்ரி 2 கோலடித்து அசத்த இந்திய அணி, 2-0 என கென்யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

ஆசிய கிண்ண தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி சொந்தமண்ணில் 4 அணிகள் பங்கேற்கும் ‘இன்டர்கான்டினென்டல்’ (கண்டங்களுக்கு இடையிலான) கிண்ண கால்பந்து தொடரில் விளையாடியது.

புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடித்த இந்தியா (Fifa தரவரிசையில் 97வது இடம்), கென்யா (112) அணிகள் மும்பையில் நடந்த இறுதிப்போட்டியில் மோதின.

அபாரமாக ஆடிய இந்திய அணித்தலைவர் சுனில் செத்ரி, 2 கோலடித்தார். முடிவில் இந்திய அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை வென்றது.

இன்றைய போட்டியில் அபார ஆற்றலை வெலிப்படுத்திய இந்திய அணித்தலைவர் சுனில் செத்ரி ஆர்ஜண்டீனாவின் நட்சத்திர வீரர் மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார்.

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் பெற்றவர்கள் வரிசையில் இந்திய அணித்தலைவர் சுனில் செத்ரி(64 கோல்கள்) மற்றும் மெஸ்சி ஆகியோர் இரண்டாவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.