Home

இலங்கையை வீழ்த்தி வரலாறு படைத்தது மேற்கிந்திய தீவுகள்.

இலங்கையை வீழ்த்தி வரலாறு படைத்தது மேற்கிந்திய தீவுகள்.

மேற்கிந்திய தீவுகளின் போர்ட் ஆப் ஸ்பெயின் மைதானத்தில் சற்றுமுன்னர் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி, 226 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட் போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நிறைவுக்கு வந்தது. முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் 8 விக்கெட்டுகளை இழந்து 414 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்த இலங்கை 185 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி, 7 விக்கெட்டுக்கு, 223 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இடை நிறுத்தியது.

பின்னர் 453 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி, 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு, 176 ஓட்டங்கள் எடுத்திருந்தது. குசால் மெண்டிஸ் (94), லகிரு காமகே (0) ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணிக்கு குசால் மெண்டிஸ் (102) சதம் கடந்து கைகொடுத்தார். காமகே (3), அணித்தலைவர் சந்திமால் (27), டிக்வெல்ல (19) ஹேரத்(0) லக்மல் (1), லகிரு குமாரா (0) என்று வரிசையில் நடையைக் கட்டினர்.

இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி, 226 ஓட்டங்கள் பெற்ற நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் ராஸ்டன் சேஸ் 4, தேவேந்திர பிஷூ 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

இந்த வெற்றியின்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி, 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் எதிர்வரும் 14 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

ஆட்ட நாயகனாக பெறுமதியான சதமடித்த விக்கெட் காப்பாளர் டோவ்ரிச் தேர்வானர்.கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை அணிக்கெதிராக மேற்கிந்திய தீவுகள் பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.