Foot Ball

2018 கால்பந்து உலகக்கிண்ண ஸ்பெஷல்- ஸ்பெயின் அணி பற்றிய சிறப்புப் பார்வை…!!

ஐரோப்பிய கழக மட்ட கால்பந்தாட்டத்திற்கு பெயர் போன ஸ்பெய்ன் 2010 இல் உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணி கைப்பற்றி அசத்தியது.

தற்போதைய பிஃபா உலகத் தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் இம்முறை தொடர்ச்சியாக பதினொராவது ஆவது உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ளது.

உலகக்கிண்ண வரலாறு

இவ் அணி 2010 இல் உலகக் கிண்ணத்தை வென்றதோடு 1950 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் 4 ஆவது இடத்தை பெற்றது.

அத்தோடு ஸ்பெய்ன் அணி 1934, 1986, 1994 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் காலிறுதி வரை முன்னேறியது.

கடந்த 2014 உலகக்கிண்ணத் தொடர் ஸ்பெயினுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. நடப்புச் சம்பியனாக களமிறங்கி சிலி மற்றும் நெதர்லாந்திடம் படுதோல்வியடைந்து வெளியேறியது.

அண்மைக்கால பெறுபேறுகள்

இம்முறை ஸ்பெய்ன் அணி ஐரோப்பிய தகுதிகாண் முதற்சுற்றுப் போட்டிகளில் இலகுவான வெற்றிகளைப் பதிவு செய்து நேரடியாக உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது.

அண்மைய நட்புறவு போட்டிகளில் ஜெர்மனி மற்றும் சுவிஸ்லாந்து ஆகிய அணிகளுக்கெதிரான ஆட்டங்களை சமநிலை செய்ததோடு ஆர்ஜென்ரீனாவுக்கு எதிராக 6-1 என்ற கோல் வித்தியாசத்தில் பாரிய வெற்றியை பெற்றது. நேற்று நடைபெற்ற துனிஷியாவிற்கெதிரான ஆட்டத்தையும் 1-0 என தன்வசப்படுத்தியது.

புதிய முகாமையாளர்

கனிஸ்ட மட்ட ஸ்பெய்ன் இளம் அணிகளுக்கு பயிற்சியாளராக அனுபவம் பெற்ற பயிற்சியாளரான ஜியூலன் லொப்டிகி உலகத் தொடரொன்றில் சிரேஸ்ட பயிற்சியாளராக முதல்முறையாக ஸ்பெயின் அணியை வழிநடத்தவுள்ளார்.

அணியின் பலம்

பார்சிலோனா மற்றும் ரியல் மட்ரிட் அணிகளில் விளையாடிய வீரர்களே அதிகமாக அணியில் இடம்பெற்று இருப்பது அந்த அணிக்கு இமாலய பலம்.

கெரார்த் பிகு மற்றும் செர்ஜியோ ரமோஸ் பின்களத்தில் ஆதிக்கம் செலுத்துவது அணிக்கு பலமாகும்.

முன்வரிசை வீரர்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரியல் மட்ரிட் நட்சத்திரங்களான மார்கோ அசன்சியோ, லூக்காஸ் வர்ஹாஸ் ஆகியோரோடு அஸ்பாஸ், மரேனோ மற்றும் டிக்கோ காஸ்டரோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய களத்தில் அனுபவ வீரர் அன்ட்ரோரஸ் இனியெஸ்டா, டேவிட் சில்வா மற்றும் ஸ்கோ ஆகியோர் அசத்தக் காத்திருக்கிறார்கள்.

தடுப்பாட்ட வீரர்களாக (Defenders) அணித்தலைவர் சேர்ஜியோ ராமோஸ், டானி கவர்ஜல் மற்றும் ஜெராட் பிஹ்கே ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கோல்காப்பாளர்களாக கெபா அரிசபலகா, டேவிட் டி கீ மற்றும் பெபெ ரினா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

முதற்சுற்றுப் போட்டிகள்

ஸ்பெய்ன் முதல் சுற்றில் போர்த்துக்கல், ஈரான் மற்றும் மொரோக்கோ அணிகளை எதிர்த்து களம் காணவுள்ளது.

இரண்டாம் சுற்றிற்கு தகுதிபெறும் பட்சத்தில் உருகுவே அல்லது ரஷ்யாவை எதிர்கொள்ள வேண்டி வரலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.