IPL - Indian Premier League

கோலி, தோனி மற்றும் ஏ.பி.டியின் விக்கெட்டுக்களே உன்னதமானவை; மனம் திறந்தார் ரஷீத் கான்..!!

அண்மையில் நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக ஆடி 21 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு துடுப்பாட்டத்திலும் மிகமுக்கியமான நேரங்களில் சோபித்தார்.

ஆப்கானிஸ்தான் அணிக்காக ஆடிவரும் வலதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், ஐபிஎல் காலங்களில் மிகமுக்கியமான நேரங்களில் மிகமுக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றுவதோடு மிகக்குறுகிய ஓட்டங்களுக்குள் தன்னுடைய பந்துப் பரிமாற்றங்களை வீசினார்.

பந்துவீச்சில் கலக்கிய ரசீட் ஹான் பல சிறந்த வீரர்களை ஆட்டமிழக்க செய்திருந்தாலும், டோனி, ஹோலி மற்றும் ஏபிடியின் விக்கெட்டுகளை கைப்பற்றியதே என் வாழ்வின் சிறப்பான விக்கெட்டுக்கள் என்றும் இவர்கள் மூவரும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்றும் ஊடகவியலாளர் சந்திப்பில் மனம்திறந்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் போட்டி அடுத்த மாத இடைக்காலத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் ரசீட் ஹானின் இந்த சிறந்த ஆட்டமானது ஆப்கானுக்கு நம்பிக்கையை மிகவும் அதிகமாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். இவருடன் சேர்ந்து முஜிப்புர் ரகுமானும் சிறப்பாக ஐபிஎல்லில் பந்துவீசியமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டில் எதுவேணும் என்றாலும் எப்பொழுதும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று….

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.