IPL - Indian Premier League

பட்லர் அபாரம்; சென்னைக்கு அதிர்ச்சி கொடுத்தது ராஜஸ்தான்

ஐ.பி.எல் தொடரின் 43 ஆவது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

சென்னையின் இன்னிங்ஸ்

தன் படி இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அதிரடியாக ஆடிய சுரேஷ் ரெய்னா 52 ஓட்டங்களைக் குவிக்க வற்சன் 39 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஜோன் ஆர்ஜர் இரண்டு விக்கெட்டுக்களைச் சாய்த்தார்.

பட்லரின் பதிலடி

பதிலளித்த ராஜஸ்தான் அணிக்கு ஜொஸ் பட்லர்-பென்ஸ் ஸ்ரோக் இணை அபார ஆரம்பத்தை வழங்கியது. பென்ஸ் ஸ்ரோக்ஸின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து வந்த மத்திய வரிசை வீரர்கள் அடுத்தடுத்து இலக்குக்களை பறிகொடுக்க ஆட்டம் சென்னையின் பக்கம் திரும்பியது.

எனினும் தனியாளாகப் போராடிய ஜொஸ் பட்லர் பின்வரிசை வீரர்களின் சிறப்பான ஒத்துழைப்புடன் அணியை வெற்றிப் பாதையை நோக்கி நகர்த்தினார். இறுதியில் ராஐஸ்தான் அணி 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கைஅடைந்து, 4 விக்கட்டுக்களால் வெற்றியைத் தனதாக்கியது. ராஜஸ்தான் சார்பாக தனியாளாக ஜொஸ் பட்லர் ஆட்டமிழக்காது 95 ஓட்டங்களைப் பெற்று ஆட்ட நாயகனாகத் தெரிவானார்.

இவ்வெற்றி மூலம் ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் ஆறாமிடத்தில் நிலைப்பதோடு பிளே-ஓப்பிற்கான சந்தர்ப்பத்தையும் தக்க வைத்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.