IPL - Indian Premier League

தவான்- வில்லியம்சன் சாதனை இணைப்பாட்டம்; சன்ரைசேர்ஸ் இலகு வெற்றி…!!

ஐ.பி.எல் தொடரின் 42 ஆவது போட்டி டெல்லியில் நடைபெற்றது. டெல்லி மற்றும் சன்ரைசேர்ஸ் அணிகள் மோதிய இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

இப்போட்டியில் ஷிகர் தவன் மற்றும் கேன் வில்லியம்சனின் பிரிக்கப்படாத 176 என்ற இணைப்பாட்டத்தின் உதவியுடன் சன்ரைசேர்ஸ் அணி 9 விக்கெட்டுக்களால் இலகுவான வெற்றியைத் தமதாக்கியது.

டெல்லி அதிரடி

முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி சஹிப் அல் ஹசனின் அபார பந்து வீச்சால் ஆரம்பத்தில் 3 விக்கெட்டுக்களை விரைவாக இழந்தது. பின்னர் ரிஷா பண்ட் ருத்திர தாண்டவம் ஆட மிகச் சிறப்பான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.

அதிரடியாக ஆடிய பண்ட் 63 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 15 பவுண்டரிகள் அடங்கலாக 128 ஓட்டங்களைக் குவித்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் சன்ரைசேர்ஸ் சார்பாக சஹிப் அல் ஹசன் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்.

சன்ரைசேர்ஸ் பதிலடி

பதிலளித்த சன்ரைசேர்ஸ் அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடி ஆரம்பத்தை வழங்கினார். எனினும் அலெக்ஸ் ஹேல்ஸ் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ஷிகர் தவனுடன் வில்லியம்சன் இணைந்தார்.

இருவரும் டெல்லியின் பந்துவீச்சாளர்களைச் சிதறடித்து 176 என்ற பிரிக்க முடியாத இணைப்பாட்டத்தை வழங்க சன்ரைசேர்ஸ் அணி 18.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து, 9 விக்கட்டுக்களால் வெற்றியைத் தனதாக்கியது. சனரைசேர்ஸ் சார்பாக ஷிகர் தவான் ஆட்டமிழக்காது 92 ஓட்டங்களைப் பெற, கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்த இணைப்பாட்டமே சன்ரைசேர்ஸ் வரலாற்றில் பெற்ற அதி கூடிய இணைப்பாட்டமாகும். ஆட்ட நாயகனாக ஷிகர் தவான் தெரிவான அதே வேளை இவ்வெற்றியுடன் சன்ரைசேர்ஸ் அணி 18 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.