IPL - Indian Premier League

பெங்களூரை வீட்டுக்கு அனுப்பி பிளே-ஓப்பிற்குள் நுழைந்தது சண்ரைசேர்ஸ்..!!

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டியில் சன்ரைசேர்ஸ் மற்றும் பெங்களூர் அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் வில்லியம்சன் மற்றும் சஹிப் அல் ஹசன் ஆகியோரின் அபார இணைப்பாட்டத்தின் உதவியுடன் சன்ரைசேர்ஸ் அணி, பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் வெற்றியைத் தமதாக்கியது.

முன்னதாக இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

சன்ரைசேர்ஸ் துடுப்பாட்டம்

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசேர்ஸ் அணி சீரான இடைவெளிகளில் முதல் மூன்று விக்கெட்டுக்களை இழந்தாலும் நான்காவது விக்கெட்டில் கேன் வில்லியம்சன்-சஹிப் அல் ஹசன் இணை நிலைத்தாடி ஓட்டங்களைப் பெற்றது. வில்லியம்சனின் ஆட்டமிப்பைத் தொடர்ந்து சன்ரைசேர்ஸ் அணி அடுத்தடுத்து விக்கட்டுக்களை இழந்து 20 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களைம் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சிறப்பாக ஆடிய வில்லியம்சன் 56 ஓட்டங்களைக் குவிக்க, சஹிப் அல் ஹசன் 35 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ரிம் சௌத்தி மற்றும் மொகமட் சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்கள்.

சன்ரைசேர்ஸின் அசத்தல் பந்துவீச்சு

பதிலளித்த பெங்களூர் அணி ஆரம்பத்தில் வேகமாக ஓட்டங்களைக் குவித்த போதிலும் மத்திய ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டடுக்களை இழக்க 11.4 ஓவர்களில் 84 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

அதன்பின்னர் வந்த கொலின் கிரான்ட்ஹோம்-மண்டீப் சிங் இணை சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி வெற்றியை பெங்களூர் பக்கம் திருப்பினார்.

இறுதி ஓவரில் பெங்களூர் 12 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில், இறுதி ஓவரை சன்ரைசேர்ஸ் சார்பாக புவனேஸ்வர குமார் வீசினார். புவனேஸ்வர குமார் இறுதி ஓவரை சிறப்பாக வீச பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களை மட்டுமே பெற்று 5 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. பெங்களூர் சார்பாக கோலி 39 ஓட்டங்களைப் பெற, கிரான்ட்ஹோம் 33 ஓட்டங்களைப் பெற்றார்.

இவ்வெற்றி மூலம் சன்ரைசேர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே-ஓப் சுற்றிற்கு முன்னேற பெங்களூர் அணி 6 புள்ளிகளுடன் தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.