Sri Lanka

தெற்காசிய மெய்வல்லுனர் போட்டிகளில் வரலாறு படைத்த வட-கிழக்கு வீர,வீராங்கனைகள்..!!

மூன்றாவது தெற்காசிய கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டிகள் கொழும்பு சுகததாஸ அரங்கில் நடைபெற்று முடிவடைந்துள்ளன.

ஆண்களுக்கான 5000மீற்றர் ஓட்டம்

இத் தொடரின் ஆண்களுக்கான 5000 மீற்றர் போட்டியில் பங்குபற்றிய வவுனியா வீரன் கிந்துசன் 16:18:43 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்து மூன்றாமிடத்தைப் பெற்று இலங்கைக்கு வெண்கலப் பதக்கமொன்றை வென்று கொடுத்துள்ளார்.

இறுதி 100 மீற்றர் தூரத்தை மின்னல் வேகத்தில் கடந்து நேபாள வீரரை பினதள்ளி கிந்துசன் இந்த வெண்கலப் பதக்கத்தை தனதாக்கியமை சிறப்பம்சமாகும்.

இவர் ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற 54 ஆவது தேசியமட்ட கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 10000மீற்றர் மற்றும் 5000மீற்றர் ஓட்டப் போட்டிகளில் முதலாம் இடத்தை பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான ஈட்டி எறிதல்

இதே வேளை பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் திருகோணமலை தங்க நகரைச் சேர்ந்த உதயவாணி 39.12 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கப் பதக்கத்தையும், சக இலங்கை வீராங்கனை வெள்ளிப் பதக்கத்தையும் வென்றமை சிறப்பம்சமாகும்.

ஆண்களுக்கான தட்டெறிதல்

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி வீரரான பிரகாஸ்ராஜ் ஆணகளுக்கான தட்டெறிதல் போட்டியில் 44.11 மீற்றர் தூரம் எறிந்து நான்காமிடத்தைப் பெற்றார். இதனால் இவர் மயிரிழையில் வெண்கலப் பதக்கத்தை தவற விட்டார்.

விளையாட்டு.கொம் சார்பாக இந்த வீர வீராங்கனைகளை வாழ்த்துவதோடு அவரை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.