Home

அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணிக்கு அதிரடி வெற்றி

அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணிக்கு அதிரடி வெற்றி.

IPL கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்று பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக பட்லர் 51 ஓட்டங்கள், சாம்சன் 28 ஓட்டங்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் தடுமாறியது. பிறகு சுதாரித்து ஆடியது. இறுதியில் 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ராகுல் 84, கருண் நாயர் 31, ஸ்டோனிஸ் 23 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிபட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.