Sri Lanka

தெற்காசிய மெய்வன்மைப் போட்டியில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த தமிழன்..!!!

3 வது தெற்காசிய கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டிகள் கொழும்பு சுகததாஸ அரங்கில் நடைபெற்று வருகின்றது. இத் தொடரின் ஆண்களுக்கான 5000 மீற்றர் போட்டியில் பங்குபற்றிய வவுனியா வீரன் கிந்துசன் 16:18:43 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்து மூன்றாமிடத்தைப் பெற்று இலங்கைக்கு வெண்கலப் பதக்கமொன்றை வென்று கொடுத்துள்ளார்.

இந்தப் போட்டியில் முதல் இரு இடங்களையும் இந்திய வீரர்கள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத் தக்கது.

இவர் ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற 54 ஆவது தேசியமட்ட கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 10000மீற்றர் மற்றும் 5000மீற்றர் ஓட்டப் போட்டிகளில் முதலாம் இடத்தை பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு.கொம் சார்பாக கிந்துசனை வாழ்த்துவதோடு அவரை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் நவநீதன் அவர்களிற்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.