India

கொல்கத்தாவை துவம்சம் செய்தது மும்பை…!!

ஐ.பி.எல் தொடரின் 37 ஆவது போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் ஹர்த்திக் பாண்டியாவின் சகல துறை ஆட்டம் கைகொடுக்க மும்பை அணி, 13 ஓட்டங்களால் வெற்றியைத் தமதாக்கியது.

முன்னதாக இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

மும்பை அதிரடி

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி எவின் லுவிஸ் மற்றும் சூரியகுமார் யாதவ் அதிரடியில் முதலாவது விக்கெட்டுக்காக 91 ஓட்டங்களைக் குவித்ததோடு மத்திய வரிசையிலும் கணிசமான ஓட்டங்களைக் குவித்தது.

இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அதிரடியாக ஆடிய சூரியகுமார் ஜாதவ் 59 ஓட்டங்களைக் குவிக்க, எவின் லுவிஸ் 43 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் சுனில் நரைன் மற்றும் அன்ரே ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்கள்.

கொல்கத்தாவின் போராட்டம்

பதிலளித்த கொல்கத்தா அணி வேகமாக முதல் இரண்டு விக்கெட்டுக்களையும் இழந்த போதிலும் ரொபின் உத்தப்பா அதிரடியாக ஆட இலக்கை நோக்கி நகர்ந்தது. அதன்பின்னர் உத்தப்பா மற்றும் நித்திஷ் ராணா அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டம் மும்பையின் பக்கம் சாய்ந்தது.

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற, மும்பை அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. கொல்கத்தா சார்பாக ரொபின் உத்தப்பா 54 ஓட்டங்களைப் பெற, தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காது 36 ஓட்டங்களைப் பெற்றார்.

துடுப்பாட்டத்தில் 35 ஓட்டங்களைப் பெற்றதோடு, 4 ஓவர்களில் வெறும் 18 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களைச் சாய்த்த ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

கொல்கத்தா அணிக்கெதிராக மும்பை அணி பெற்ற தொடர்ச்சியான 7 ஆவது வெற்றியாக இவ்வெற்றி அமைவது குறிப்பிடத்தக்கது.

இவ்வெற்றி மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திற்கு முன்னேற கொல்கத்தா அணி 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.