Home

பஞ்சாப்பை பந்தாடியது மும்பாய் இந்தியன்ஸ்.

பஞ்சாப்பை பந்தாடியது மும்பாய் இந்தியன்ஸ்.

IPL 34வது லீக் போட்டியில் பஞ்சாப் – மும்பை அணிகள் மோதின. நாணய சுழற்ச்சியில் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

பஞ்சாப் அணியின் ஆரம்ப வீரர்களாக கெய்ல் மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினர். இந்த இணை மெதுவாக ஆட்டத்தை தொடங்கியது. ராகுல் 24 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, கெய்ல் அரைசதம் அடித்து அசத்தினார்.

எனினும் அடுத்தவந்த வீரர்கள் சொதப்ப நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்க வீரர் லீவிஸ் 10 ஓட்டங்களுக்கு ஏமாற்றினாலும், மற்றொரு தொடக்க வீரர் சூரியகுமார் யாதவ் சிறப்பாக ஆடினார். அவர் 42 பந்துகளில் 57 ஓட்டங்கள் குவித்தார்.

பின்னர் வந்த இஷான் கிஷான் மற்றும் பாண்டியா ஆகியோரும் சிறப்பாக ஆடினார். இஷான் 25 ஓட்டங்களுக்கும், பாண்டியா ஓட்டங்களுக்கும் வெளியேறினர். அதன்பின் இணைந்த அணித்தலைவர் ரோஹித் சர்மா – குர்னல் பாண்டியா அதிரடியாக ஆடி மும்பை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.

இருவரின் சிறப்பான ஆட்டத்தால் ஒரு ஓவர் மீதமிருக்கையில் அந்த அணி வெற்றி இலக்கை எட்டியது.

குர்னல் பாண்டியா 31 ஓட்டங்களுக்கும், ரோஹித் சர்மா 24 ஓட்டங்களும் பெற்று களத்தில் இருந்தனர். தொடர் தோல்விகளை சந்தித்து கொண்டிருந்த மும்பை அணி இந்த வெற்றியின் மூலம் சற்று நிம்மதியடைந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.