Home

நிதஹாஸ் கிண்ணம் -இந்தியா அபார வெற்றி.

நிதஹாஸ் கிண்ணம் -இந்தியா அபார வெற்றி.

இலங்கையின் 70  வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் நிதஹாஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று இடம்பெற்ற பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் நாநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா முதலில் துடிப்பாடும் வாய்ப்பை பங்களாதேஷ் அணிக்கு வழங்கினார்.

அதன்படி முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20  ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 139  ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் லிட்டன் தாஸ் 34  ஓட்டங்களையும், சபீர் ரஹ்மான் 30  ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்தியாவின் பந்துவீச்சில் தமிழக வீரர் விஜய் சங்கர் 32  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், ஜெயதேவ் உனட்கட் 38 ஓட்டங்களுக்கு 3  விக்கெட்களையும், சஹால், தாகூர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 140  எனும் இலக்குடன் களமாடிய இந்திய அணி 18 .2ஓவர்கள் நிறைவில் 4விக்கெட்களை இழந்து போட்டியில் வெற்றிபெற்றது.

 

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.