Home

ரோஸ் டெய்லர் அபார சதம்- நியூசிலாந்து அசத்தல்

ரோஸ் டெய்லர் அபார சதம்- நியூசிலாந்து அசத்தல்.

நியூஸிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையிலான இன்றைய 4 வது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய 4 வது போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணியின் தலைவர் முதலில் களத்தடுப்பு முடிவை மேற்கொண்டார்.

அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி,நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 335 ஓட்டங்களை பெற்றது, அணி சார்பில் ஜொன்னி பெயர்ஸ்டோ, ஜொ ரூட் ஆகியோர் சதமடித்தனர்.

பதிலுக்கு ஆடிய நியூசிலாந்து அணியின் ஆரம்ப வீரர்கள் இருவரும் ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்தாலும் ரோஸ் டெயிலர் ஆடடம் இழக்காது 147 பந்துகளில் 181 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இதன்முலமாக நியூசிலாந்து அணி,3 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்களை வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.

5 போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என்று சமநிலையில் காணப்படுகின்றது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.