Home

இந்திய அணியின் புதிய ஒப்பந்தம்-டோனிக்கு ஆப்பு

இந்திய அணியின் புதிய ஒப்பந்தம்-டோனிக்கு ஆப்பு.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஓக்டோபர் 2017 முதல் இந்தாண்டு செப்டம்பர் மாதம் வரை புதிய ஒப்பந்தம் செல்லுபடியாகும் என இந்திய கிரிக்கெட் சபையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய ஒப்பந்த பட்டியலில் ஆடவர் பிரிவில் புதிதாக A+ ஒப்பந்தமும், மகளிர் பிரிவுக்கு புதிதாக C ஒப்பந்தமும் சேர்க்கப்பட்டுள்ளன.

அதிகப்படியாக சம்பளம் பெறும் வீரர்களாக இந்திய அணியின் தலைவர் கோஹ்லி, டோனி, அஸ்வின், ரஹானே ஆகியோர் இருந்துவந்த நிலையில், இப்போது அதையும் தாண்டியதாக A Plus என்று புதியவகை ஒப்பந்தம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.

7 கோடி அடிப்படை சம்பளமாக குறிக்கப்பட்டுள்ள குறித்த A Plus பட்டியலில் விராட் கோஹ்லி,ரோஹித் சர்மா ,ஷிகர் தவான்
புவனேஸ்வர் குமார் ,ஜஸ்பிரிட் பூம்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

5 கோடி சம்பளம் பெறும் A வகை ஒப்பந்தத்தில் டோனி, அஸ்வின், ஜடேஜா, முரளி விஜய், புஜாரா,ரஹானே,சஹா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

3 கோடி சம்பள பெறும் B வகை ஒப்பந்தத்தில் லோகேஷ் ராகுல், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ்,சஹால், ஹார்டிக் பாண்டியா, இஷாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

1 கோடி சம்பளம் பெறும் C வகை ஒப்பந்தத்தில் கேதார் யாதவ்,மனிஷ் பாண்டே,அக்சர் பட்டேல், கருண் நாயர், சுரேஷ் ரெய்னா, பார்த்திப பட்டேல், ஜெயந்த் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஒப்பந்த பட்டியலில் 26 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொஹமெட் சமி, யுவ்ராஜ் சிங் ஆகியோர் புதிய ஒப்பந்தத்தில் இணைக்கப்படவில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.